‘த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு படத்தில் நடிக்கும் ராணா… உண்மை என்ன!?

‘த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு படத்தில் நடிக்கும் ராணா… உண்மை என்ன!?

த்ரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் நடிப்பதாக வெளியான செய்திகளுக்கு ராணா பதிலளித்துள்ளார்.

‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான இரண்டாம் பாகமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஏற்கனவே த்ரிஷ்யம் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சிங்களம், சீனா மொழியில் கூட ரீமேக் செய்யப்பட்டு ஹிட் அடித்தது. தற்போது த்ரிஷ்யம் இரண்டாம் பாகமும் தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட சில படங்களில் ரீமேக் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு படத்தில் நடிக்கும் ராணா… உண்மை என்ன!?

தெலுங்கில் த்ரிஷ்யம் முதல் பாகத்தை ஸ்ரீ ப்ரியா இயக்கியிருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தில் தெலுங்கு ரீமேக்கை ஜீத்து ஜோசப் இயக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் த்ரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் நடிகர் முரளி கோபி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தெலுங்கு ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் ராணா நடிக்கவிருப்பதாக அதிக செய்திகள் வெளியானது.

‘த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு படத்தில் நடிக்கும் ராணா… உண்மை என்ன!?

தற்போது செய்தியாளர்களிடம் பேசிய ராணா அந்த செய்தி முற்றிலும் தவறானது. தான் அந்தப் படத்தின் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ராணா தற்போது விரதபர்வம் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் உடன் நடிக்கவிருக்கிறார்.

Share this story