பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி!

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி!

பாலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறித்தனமாக ஆட்டம் ஆடிய கொரோனா தற்போது தன் வேகத்தைக் குறைத்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே சிலர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்தியாவில் பெரும்பாலான திரைப்பிரபலங்களின் உடலில் கொரோனா ஒரு விசிட் அடித்துவிட்டது. தற்போது அந்த லிஸ்டில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் இணைந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி!

ரன்பிர் கபூரின் தாயார் நடிகை நீது கபூர் தனது மகன் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். “உங்கள் அக்கறைக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. ரன்பிர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அதற்கான சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார். அவர் வீட்டில் சுய தனிமையில் இருக்கிறார் மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றறி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி!

இதையடுத்து ரன்பிர் கபூர் விரைவில் குணமடைய பலரும் பிரார்த்தனை செய்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் ரன்பிர் கபூரின் மாமா ரந்தீர் கபூர், ரன்பிர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story