ராவணன் கதாபாத்திரம் இந்தப் படத்தில் நியாயப்படுத்தப்படும்…ஆதிபுருஷ் குறித்து சைப் அலி கான்!

ராவணன் கதாபாத்திரம் இந்தப் படத்தில் நியாயப்படுத்தப்படும்…ஆதிபுருஷ் குறித்து சைப் அலி கான்!

நடிகர் சைப் அலி கான் ஆதிபுருஷ் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி மனம் திறந்துள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் சரித்திர புராணமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ராவணன் கதாபாத்திரம் இந்தப் படத்தில் நியாயப்படுத்தப்படும்…ஆதிபுருஷ் குறித்து சைப் அலி கான்!

இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கான் வில்லனாக நடிக்கிறார். பிரபாஸ் ராமராக நடிக்கும் போது சைப் அலி கான் வில்லன் ராவணனாக நடிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் வெளியான போஸ்டரில் பத்து தலையுடன் ராவணன் மற்றும் ராமர் வில்லுடன் இருக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.

ராவணன் கதாபாத்திரம் இந்தப் படத்தில் நியாயப்படுத்தப்படும்…ஆதிபுருஷ் குறித்து சைப் அலி கான்!

தற்போது சைப் அலி கான் ஆதிபுருஷ் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி மனம் திறந்துள்ளார். “இயக்குனர் ஓம் ரவுத் வில்லன் கதாபாத்திரத்தை மனிதாபிமானம் உள்ளவனாகவும், பொழுதுபோக்காகவும் மாற்றியுள்ளார். ஒரு அரக்கன் ராஜாவாக நடிப்பது சுவாரஸ்யமானது, அதில் கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கும். ஆனால், நாங்கள் அவரை மனிதாபிமானமுள்ளவர்களாக ஆக்குவோம். ராவணனின் சகோதரி சுர்ப்பனகைக்கு லக்ஷ்மனால் மூக்கு துண்டிக்கப்பட்டது. அதனால் தான் அவர் சீதாவைக் கடத்தியதையும், ராமுடனான போரையும் இந்தப் படத்தில் நியாயப்படுத்துகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது நடிகை க்ரித்தி சானோன் இப்படத்தில் சீதையாக நடிக்க தான் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராவணன் கதாபாத்திரம் இந்தப் படத்தில் நியாயப்படுத்தப்படும்…ஆதிபுருஷ் குறித்து சைப் அலி கான்!

3டி டெக்னாலஜியில் உருவாகவிருக்கும் இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நேரடியாக எடுக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. T-Series நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

Share this story