கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கும் நிவேதா தாமஸ், ரெஜினா கேசன்ட்ரா!

கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கும் நிவேதா தாமஸ், ரெஜினா கேசன்ட்ரா!

நடிகைகள் ரெஜினா மற்றும் நிவேதா தாமஸ் இருவரும் கொரியன் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் சுதீர் வர்மா என்பவர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படத்தில் நடிகை நிவேதா தாமஸ் மற்றும் ரெஜினா கேசன்ட்ரா இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கும் நிவேதா தாமஸ், ரெஜினா கேசன்ட்ரா!

இந்தப் படம் ‘மிட்நைட் ரன்னர்ஸ்’ என்ற கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்தப் படத்திற்கு தெலுங்கில் ‘ஷாகினி தாகினி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கும் நிவேதா தாமஸ், ரெஜினா கேசன்ட்ரா!

ஒரு போலீஸ் அகாடமியைச் சேர்ந்த இரண்டு பயிற்சி நிலை காவலர்களின் கதையை இந்தப் படம் விவரிக்கிறது. கொரிய படத்தில் இரண்டு ஆண்கள் நடித்திருந்தனர். ஆனால் தெலுங்கு ரீமேக்கில் இரண்டு பெண்களை நடிக்க வைக்க உள்ளனர்.

நடிகைகளுக்கு ஏற்றவாறு ஸ்கிரிப்ட் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் குரு பிலிம்ஸ் நிறுவனங்கள் இந்தப் இணைந்து படத்தை தயாரிக்கவுள்ளனர்.

Share this story