அரசியல்வாதியாக மிரட்டியுள்ள ரம்யா கிருஷ்ணன்… ரிபப்ளிக் படத்தின் டீசர் வெளியீடு…

அரசியல்வாதியாக மிரட்டியுள்ள ரம்யா கிருஷ்ணன்… ரிபப்ளிக் படத்தின் டீசர் வெளியீடு…

நடிகர் ரம்யா கிருஷ்ணன் அரசியல்வாதியாக நடித்துள்ள ‘ரிபப்ளிக்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அரசியல்வாதியாக மிரட்டியுள்ள ரம்யா கிருஷ்ணன்… ரிபப்ளிக் படத்தின் டீசர் வெளியீடு…

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். எந்த கேரக்டர் கொடுத்தாலும், அதற்கேற்ற சிறந்த நடிப்பை கொடுத்து வருகிறார். இவர் ரஜினியுடன் நடித்த ‘படையப்பா’ படம்‌ மாபெரும்‌ வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரஜினிக்கு சமமாக நீலாம்பரி கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

அரசியல்வாதியாக மிரட்டியுள்ள ரம்யா கிருஷ்ணன்… ரிபப்ளிக் படத்தின் டீசர் வெளியீடு…

இதையடுத்து சூப்பர் ஹிட்டடித்த ‘பாகுபலி’ படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்து உலக புகழ் பெற்றுள்ளார். நிறைய படங்களில் அம்மனாக தோன்றிய காட்சியளிப்பார். அதே அளவுக்கு கவர்ச்சியாக நடித்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். எந்த கேரக்டர் கொடுத்தாலும், அதை உணர்ந்து நடிக்கும் திறன் ரசிகர்களின் ‌பேதரவை பெற்று தந்துள்ளது.

அரசியல்வாதியாக மிரட்டியுள்ள ரம்யா கிருஷ்ணன்… ரிபப்ளிக் படத்தின் டீசர் வெளியீடு…

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தெலுங்கில் நடித்துள்ள படம் ‘ரிபப்ளிக்’. பெரிய அரசியல்வாதியாக நடித்து கலக்கியுள்ளார். இந்த படத்தின் ஹீரோவாக சாய்தேஜ் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். தேவ் கட்ட இயக்கியுள்ள இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் நடிக்கும் ரம்யா கிருஷ்ணனின் கலை வடிவில் இருக்கும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரம்யா கிருஷ்ணன், விசாகராணி என்ற மாஸ் அரசியல்வாதியாக நடித்துள்ளார். டீசரில் இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

Share this story