சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ஆர்ஜே பாலாஜி!

சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ஆர்ஜே  பாலாஜி!

பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்ஜே பாலாஜி நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவை மிகவும் ராசியாக நடிகர் என்று கூறுவதுண்டு. ஏனெனில் அவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்து விடும். மேலும் பல மொழிகளிலும் அந்தப் படங்கள் ரீமேக் ஆகும். அந்தாதுன், ஆர்டிகிள் 15 உள்ளிட்ட படங்கள் தமிழ் உட்பட பல மொழிகளில் ரீமேக் ஆகி வருகின்றன.

தற்போது ஆயுஷ்மான் நடிப்பில் உருவான மற்றுமொரு படம் தமிழில் ரீமேக் ஆகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ஆர்ஜே  பாலாஜி!

2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் அமித் ரவிந்த்ரநாத் இயக்கத்தில் வெளியான ‘பதாய் ஹோ’ என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவிருப்பதாகவும் அதில் ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கவிருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சத்யராஜ் இப்படத்தில் ஆர்ஜே பாலாஜியின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார்.

சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ஆர்ஜே  பாலாஜி!

மேலும் அந்தப் படத்திற்கு ‘வீட்ல விஷேசங்க’ என்று தலைப்பும் வைத்துவிட்டார்களாம். இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி இயக்குனர் பாக்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this story