லேடி சூப்பர் ஸ்டாரின் ‘ராக்கி’ படத்தின் டீசர் வெளியீடு

லேடி சூப்பர் ஸ்டாரின் ‘ராக்கி’ படத்தின் டீசர்  வெளியீடு

ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் ராக்கி படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் நயன்தாரா.

லேடி சூப்பர் ஸ்டாரின் ‘ராக்கி’ படத்தின் டீசர்  வெளியீடு

அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படம் ‘ராக்கி’. இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தின் ஹீரோ வசந்த் ரவி இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. டார்புக்கா சிவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டாரின் ‘ராக்கி’ படத்தின் டீசர்  வெளியீடு

இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரௌடியிசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

இந்த படத்தின் “நாட்டுக்கு போகலாம்” பாகம் 3 டீசரை லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story