ஜார்ஜியாவில் டூயட் பாடும் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே!

ஜார்ஜியாவில் டூயட் பாடும் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே!

ஜார்ஜியாவில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் ரொமான்டிக் பாடல் படமாக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து வருகிறது.

Image

முதலில் பூஜா தவிர மற்ற படக்குழுவினர் ஜார்ஜியா பறந்தனர். பூஜா மற்ற சில படங்களில் பிசியாக நடித்து வந்ததால் சில நாட்கள் கழித்து ஜார்ஜியா சென்றடைந்தார்.

ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் சண்டை மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் ரொமான்டிக் பாடல் ஒன்றை படமாக்கி வருகிறார்களாம். அனிருத் பாடலின் ரப் கட் ஒன்றை அனுப்பிவிட்டாராம். அதை வைத்து பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.

ஜார்ஜியாவில் டூயட் பாடும் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே!

ஜார்ஜியாவில் கிட்டத்தட்ட 16 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஏப்ரல் 9-ம் தேதி அங்கு படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் மீதமுள்ள காட்சிகளை படமாக்கிவிட்டு விரைவில் படக்குழுவினர் சென்னை திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story