ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் எப்போது ? அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழு…

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் எப்போது ? அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழு…

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் எப்போது ? அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழு…

பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலியின் பார்வை மெகா பட்ஜெட் படங்களை நோக்கியே உள்ளது. ராஜமௌலி அடுத்து இயக்கியுள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ராம் சரண் தேஜா – ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணி இணைந்து நடித்துள்ளது. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை டிவிவி தானய்யா நிறுவனம் தயாரித்துள்ளது.

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் எப்போது ? அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழு…

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டிருந்த நிலையில் கடந்தவாரம் தான் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்கவுள்ளதாக ராஜமௌலி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் எப்போது ? அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழு…

சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஷூட்டிங் பணிகளை முடித்து கிராபிக்ஸ் பணிகள் நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு. வரும் அக்டோபர் மாதம் 13ம் தேதி தசரா விழாவையொட்டி இந்த படம் திரைக்கு வருகிறது. இந்த தகவலை படத்தின் இயக்குனர் ராஜமௌலி தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Share this story