நம்ம ‘தல’க்காக வெயிட் பண்றது வீண் போகாது… வலிமை குறித்து பிரபல இசையமைப்பாளர்!

நம்ம ‘தல’க்காக வெயிட் பண்றது வீண் போகாது… வலிமை குறித்து பிரபல இசையமைப்பாளர்!

‘வலிமை’ அப்டேட்டிற்காக நீண்ட நாள் காத்திருப்பதற்கான ஏற்ற பலன் கிடைக்கும் என்ற வகையில் இசையமைப்பாளர் எஸ் தமன் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வரும் தனது ரசிகர்களுக்காக சமீபத்தில் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நம்ம ‘தல’க்காக வெயிட் பண்றது வீண் போகாது… வலிமை குறித்து பிரபல இசையமைப்பாளர்!

“கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் “வலிமை” சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுறச் செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும்” என்று தெரிவித்திருந்தார்.

அதையடுத்தும் சில ரசிகர்கள் அப்டேட் கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர். கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் வலிமை அப்டேட் கேட்டனர். அவர் தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

தற்போது இசையமைப்பாளர் எஸ் தமனிடம் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள தமன் “என் அன்பு சகோதரர் யுவன் வலிமை படத்தின் முதல் பாடலை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். தல படத்திற்காக காத்திருப்பதிலும் ஒரு அர்த்தம் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story