ராக்கி பாய்-க்கே ஃடப் கொடுக்கும் மாஸ் லுக்கில் செல்வராகவன்… பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்!

ராக்கி பாய்-க்கே ஃடப் கொடுக்கும் மாஸ் லுக்கில் செல்வராகவன்… பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்!

செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் சாணிக்காயிதம் படக்குழுவினர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

ராக்கி பாய்-க்கே ஃடப் கொடுக்கும் மாஸ் லுக்கில் செல்வராகவன்… பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்!

இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரது நடிப்பில் ‘சாணிக் காயிதம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். செல்வராகவனும் கீர்த்தி சுரேஷும் கையில் ரத்தக்கறையுடன் உள்ள ஆயுதங்களுடன் சரண் அடைந்தது போல வடிவமைக்கப்பட்டிருந்த போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ராக்கி பாய்-க்கே ஃடப் கொடுக்கும் மாஸ் லுக்கில் செல்வராகவன்… பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்!

இன்று இயக்குனர் செல்வராகவன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு சாணிக்காயிதம் படக்குழுவினர் செல்வராகவனின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த போஸ்டரில் செல்வராகவன் கையில் துப்பாக்கியுடன் சிகரெட் பிடித்துக்கொண்டு மாஸ் ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் வகையில் மிரட்டலாகத் தோன்றுகிறார்.

இயக்கத்தில் நம்மை அசத்திய செல்வராகவன் நடிப்பில் எப்படி கலக்கப் போகிறார் என்று பார்க்க கோலிவுட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Share this story