"7000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உலகின் மிக புத்திசாலித்தனமான அரக்கன்"… ஆதிபுருஷ் படத்தில் ராவணனாக நடிக்கும் சைப் அலி கான்!

"7000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உலகின் மிக புத்திசாலித்தனமான அரக்கன்"… ஆதிபுருஷ் படத்தில் ராவணனாக நடிக்கும் சைப் அலி கான்!

நடிகர் பிரபாஸ் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் ராமாயண கதையை அடிப்படையாயாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்தப் படம் 3டி டெக்னாலஜியில் நேரடியாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. T-Series நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.
"7000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உலகின் மிக புத்திசாலித்தனமான அரக்கன்"... ஆதிபுருஷ் படத்தில் ராவணனாக நடிக்கும் சைப் அலி கான்!
ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் கடவுள் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். நடிகை கீர்த்தி சுரேஸை சீதை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Tanhaji The Unsung Warrior: Ajay Devgn introduces Saif Ali Khan as ...
பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் ஆதிபுருஷ் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக முன்னரே செய்திகள் வெளியாகின. தற்போது அந்தத் தகவல் உறுதியாகியுள்ளது. ஆதிபுருஷ் படக்குழுவினர் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளனர். சைப் அலி கான் இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். “7000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உலகின் மிக புத்திசாலித்தனமான அரக்கன்” என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.

Share this story