பிரபாஸ் தான் ராமர், அப்போ ராவணன் யார்!?… ஆதிபுருஷ் படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்!?

பிரபாஸ் தான் ராமர், அப்போ ராவணன் யார்!?… ஆதிபுருஷ் படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்!?

பிரபாஸ் தற்போது ‘தன்ஹாஜி’ படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத்-வுடன் கூட்டணி அமைத்துள்ளார். படத்திற்கு ‘ஆதிபுருஷ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றை பிரபாஸ் வெளியிட்டுள்ளார். அந்தப் போஸ்டரில் ராமாயண கதாபாத்திரங்கள் இடம் பெற்றது போல் இருப்பதைக் காணலாம். இந்தப் படம் ராமாயண கதையை அடிப்படையாயாகக் கொண்டு எடுக்கப்படுகிறது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
பிரபாஸ் தான் ராமர், அப்போ ராவணன் யார்!?... ஆதிபுருஷ் படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்!?
இந்தப் படம் 3டி டெக்னாலஜியில் நேரடியாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. T-Series நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறதாம்.
ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் கடவுள் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். நடிகை கீர்த்தி சுரேஸை சீதை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பிரபாஸ் தான் ராமர், அப்போ ராவணன் யார்!?... ஆதிபுருஷ் படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்!?
ஹீரோ ஹீரோயின் முடிவு பண்ணியாச்சு. அப்புறம் வில்லன் யார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதுகுறித்து முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் ஆதிபுருஷ் படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறாராம்.
Tanhaji The Unsung Warrior: Ajay Devgn introduces Saif Ali Khan as ...
பிரபாஸுக்கு ஏற்ற கம்பீரமான வில்லன் தான்! ராமாயணக் கதை என்றால் நிச்சயமாக ராவணன் தான் வில்லனாக இருக்கவேண்டும் அல்லவா!

Share this story