சயிஃப் அலி கான் மகளுக்கு பிச்சைப்போட்ட வெளிநாட்டினர் !

சயிஃப்  அலி கான் மகளுக்கு பிச்சைப்போட்ட வெளிநாட்டினர் !

பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப்  அலி கானின் மகள் சாரா அலிகான் கடை வாசலில் நடனம் ஆடியதை பார்த்து வெளிநாட்டினர் சிலர் பணம்கொடுத்துள்ளனர்.

சயிஃப்  அலி கான் மகளுக்கு பிச்சைப்போட்ட வெளிநாட்டினர் !

நடிகை சாரா அலி கான் 2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத்
படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக அறிமுகமானார். அந்த படம் நல்ல ஹிட் ஆகவே சாரா அலி கானுக்கு தொடர்ந்து பாலியுடன் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக சிம்பா கார்த்திக் ஆரியன் உடன் லவ் ஆஜ்கல் படங்களில் இவர் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் தனுஷ் மற்றும் அக்‌ஷய் குமாருடன் இணைந்து அட்ரங்கி ரே என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் சாரா ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார்.

சயிஃப்  அலி கான் மகளுக்கு பிச்சைப்போட்ட வெளிநாட்டினர் !

கொரானா கட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டிருந்த ஷூட்டிங் இப்போது மீண்டும் தொடங்கியிருக்கும் நிலையில் சாராவின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தான் வெளிநாட்டிற்கு விடுமுறைக்காக சென்றிருந்தபோது தந்தை சயிஃப் அலி கானும் அவரது தாயும் கடையில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது தனது தம்பியுடன் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த சாரா பொழுதுபோக்கிற்காக நடனமாடியுள்ளார்.
இதனை சாலையில் நடந்து சென்ற சிலர் அவரை யாரோ ஆதரவற்றவர் என எண்ணி அவர் நடனம் ஆடியதற்கு பணம் கொடுத்துள்ளனர். இந்த நிகழ்வு தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share this story