சகுந்தலம் புராணப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்க மலையாள இளம் நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் வெளியாகி வெற்றிப்பெற்ற சரித்திரப்படம் ருத்ரமாதேவி. அனுஷ்கா ஹீரோயினாக நடித்து புகழ்பெற்ற இப்படத்தை குணசேகர் இயக்கினார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

இதையடுத்து மீண்டும் ஒரு புதிய சரித்திர படத்தை குணசேகரன் இயக்கவுள்ளார். சகுந்தலம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது.

சகுந்தலை காதலை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகிறது. இதில் கேரக்டர் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகுந்தலையின் காதலன் துஷ்யந்தன் கேரக்டருக்கு எந்த நடிகரும் ஒப்பந்தமாகாமல் இருந்தது. இந்நிலையில் துஷ்யந்தன் கேரக்டரில் நடிக்க மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது.