பாகுபலி ஹீரோவுக்கு வில்லனாகும் ‘விஜய் சேதுபதி’

பாகுபலி ஹீரோவுக்கு வில்லனாகும் ‘விஜய் சேதுபதி’

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோ என்ற எந்த பந்தவும் இல்லாமல் நடிக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி, வில்லன், ஹீரோ என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கும் திறன் படைத்த விஜய் சேதுபதி, சிறுசிறு வேடங்களில் நடித்து இந்த நிலைக்கு வந்துள்ளார்.

பாகுபலி ஹீரோவுக்கு வில்லனாகும் ‘விஜய் சேதுபதி’

முன்னணி கதாநாயாகனாக திரையுலகில் வலம் வரும் அவர், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும், சீதக்காதியில் வயதானவராகவும், விக்ரம், வேதாவில் வில்லன், விஜய்யின் மாஸ்டர் என பல படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பாகுபலி ஹீரோவுக்கு வில்லனாகும் ‘விஜய் சேதுபதி’

தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நல்ல கதாபாத்திரம் என்றால் தயங்காமல் ஓகே சொல்லி நடித்தும் வருகிறார் விஜய் சேதுபதி.

பாகுபலி ஹீரோவுக்கு வில்லனாகும் ‘விஜய் சேதுபதி’

இந்நிலையில் கேஜிஎப் பட இயக்குனர் நீல் இயக்கும் புதிய படத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கிறார். ‘சலார்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Share this story