20 வருடங்களுக்குப் பிறகு நடிகையுடன் முத்தக் காட்சி… விரதத்தைக் கலைத்தாரா சல்மான் கான்!?

20 வருடங்களுக்குப் பிறகு நடிகையுடன் முத்தக் காட்சி… விரதத்தைக் கலைத்தாரா சல்மான் கான்!?

நடிகர் சல்மான் கான் ராதே படத்தில் திஷா பதானி உடனான முத்தக்காட்சி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சல்மான் கான் தற்போது பிரபுதேவா இயக்கத்தில் ராதே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சல்மான் கான் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த வருட ரம்ஜான் தினத்தில் ராதே திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி-யில் ஒரு சேர வெளியாகவிருக்கிறது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் நிர்வாகத்தை அதிகரித்துள்ளது.

20 வருடங்களுக்குப் பிறகு நடிகையுடன் முத்தக் காட்சி… விரதத்தைக் கலைத்தாரா சல்மான் கான்!?


இந்நிலையில் சல்மான் கான், திஷா பதானி உடன் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார். திஷா பதானி 28 வயது ஆனால் சல்மான் கானுக்கு 55 வயது.

திஷா குறித்து பேசிய சல்மான் “அவர் இந்தப் படத்தில் மிக அருமையாக வேலை செய்துள்ளார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். நாங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே வயதுடையவர்கள் போன்று இருக்கிறோம். திஷா என்னுடைய வயதுக்கு தெரியவில்லை. நான் தான் திஷா வயதுக்கு ஏற்ற இளமைத் தோற்றத்தில் காணப்படுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

20 வருடங்களுக்குப் பிறகு நடிகையுடன் முத்தக் காட்சி… விரதத்தைக் கலைத்தாரா சல்மான் கான்!?

பின்னர் திஷா உடனான முத்தக்காட்சி குறித்தும் அவர் பேசினார். ஏனென்றால் சல்மான்கான் கடந்த 20 வருடங்களாக முத்தக்காட்சிகள் எதுவும் நடிக்கவில்லை.20 வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் திஷா உடன் முத்தக் காட்சியில் நடித்துள்ளார்.
நான் திஷாவின் உதடுகளில் முத்தமிட வில்லை. டேப் பயன்படுத்தினோம். நான் டேப்பில் தான் முத்தமிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சல்மான் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Share this story