துபாயில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள சல்மான் கான் படம்!

துபாயில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள சல்மான் கான் படம்!

சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே’ திரைப்படம் துபாயில் பிரம்மாண்ட வெளியீட்டைப் பெற்றுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் ராதே என்ற படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சல்மான் கான் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இன்று ரம்ஜான் தினத்தில் ராதே திரைப்படம் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் வெளியாகியுள்ளது. ZEEPlex ஓடிடி தளத்திலும் ராதே திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

துபாயில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள சல்மான் கான் படம்!

நேற்று இரவு 10.30 மணிக்கு துபாயில் உள்ள திரையரங்குகளில் ராதே திரைப்படம் வெளியாகியுள்ளது. அதை முன்னிட்டு அங்கு அந்தப் படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விடீயோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ராதே படத்தை நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். ரன்தீப் கூடா, ஜாக்கி ஷராப், பரத் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

Share this story