என்னோடு கலந்தது ‘பல்லாவரம் மலை’… சிறு வயது நினைவுகள் குறித்து சமந்தா உருக்கம்…

என்னோடு கலந்தது ‘பல்லாவரம் மலை’… சிறு வயது நினைவுகள் குறித்து சமந்தா உருக்கம்…

பல்லாவரம் மலை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் சமந்தா.

என்னோடு கலந்தது ‘பல்லாவரம் மலை’… சிறு வயது நினைவுகள் குறித்து சமந்தா உருக்கம்…

தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வருபவர் சமந்தா. ‘மாஸ்கோவின் காவேரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர், பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

என்னோடு கலந்தது ‘பல்லாவரம் மலை’… சிறு வயது நினைவுகள் குறித்து சமந்தா உருக்கம்…

இதையடுத்து 2010-ம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

என்னோடு கலந்தது ‘பல்லாவரம் மலை’… சிறு வயது நினைவுகள் குறித்து சமந்தா உருக்கம்…

1987-ம் ஆண்டு கேரள மாநிலம் ஆழப்புலாவில் சமந்தா பிறந்தார். ஆனால் வளர்ந்தெல்லாம் சென்னை பல்லாவரத்தில் தான். ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்ற அவருக்கு சென்னை மாநகரம் என்பது ரொம்பவும் பரீட்சையமான இடம்.

இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் சமந்தா. இதற்காக சென்னை வந்தபோது பல்லாவரம் மலையை வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் இந்த மலை நான் சிறு வயதாக இருந்தபோது என் வீட்டு மாடியிலிருந்து தெரியும். எனக்குப் பிடித்த இடம். பரீட்சை நாட்களின் பரபரப்பான காலை தருணங்கள். எல்லா கடவுள்களுக்கும் நான் செய்த நிறைவேற்றாத சத்தியங்கள். என் முதல் காதல், இதயம் உடைந்தது, என்னுடைய நண்பரின் இறப்பு, கண்ணீர், பிரியா விடைகள் என தன்னுடைய சிறு வயது நினைவுகளை உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Share this story