திடீரெனத் திருமணம் முடித்த சிம்பு பட நடிகை!

திடீரெனத் திருமணம் முடித்த சிம்பு பட நடிகை!

சிலம்பாட்டம் படத்தில் நடித்த நடிகை சனா கான் ரகசியமாகத் திருமணம் செய்துள்ளார்.

பாலிவுட் நடிகை சனா கான் தமிழில் ‘சிலம்பாட்டம்’ படத்தில் நடித்திருந்தார். தம்பிக்கு இந்த ஊரு, பயணம், அயோக்யா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சனா கான், முப்தி அனாஸ் என்பவரை ரகசியமாகத் திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இவர்கள் திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

திடீரெனத் திருமணம் முடித்த சிம்பு பட நடிகை!

சில மாதங்களுக்கு முன் சனா கான், தான் திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில் “இன்று நான் என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் நின்று பேசுகிறேன். பல ஆண்டுகளாக, நான் திரைத்துறை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். இந்த நேரத்தில் எனது ரசிகர்களிடமிருந்து எல்லா வகையான புகழ், மரியாதை மற்றும் செல்வங்கள் எனக்கு கிடைத்தன அதற்காக நான் அவர்களுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

சனா கான் இதற்கு முன்னர் நடன இயக்குனர் மெல்வின் லூயிஸ் என்பவரைக் காதலித்து வந்தார். தனது காதலை 2019ல் அறிவித்தார். பின்னர் இவர்கள் இருவரும் 2020-ல் பிரிந்தனர்.

தற்போது சனா கான், முப்தி அனாஸ் இருவரது திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Share this story