விஜய் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கும் மீரா மிதுன்.. “இதோட நிறுத்திக்கோங்க”- எச்சரித்த சனம் ஷெட்டி…

விஜய் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கும் மீரா மிதுன்.. “இதோட நிறுத்திக்கோங்க”- எச்சரித்த சனம் ஷெட்டி…

பிக் பாஸ் புகழ் மீரா மிதுன்  ட்விட்டரில் தொடர்ந்து பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக கோலிவுட்டில் ஒரு மாஃபியா கேங் இருக்கிறது என கூறும் அவர், அதனால் தான் தனக்கு எந்த பட வாய்ப்பு வந்தாலும் அதை அவர்கள் தடுத்து விடுகிறார்கள் என கூறி வருகிறார். திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கங்கனா ரணாவத் போன்ற நடிகைகளை வம்புக்கு இழுத்தார்..
விஜய் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கும் மீரா மிதுன்.. “இதோட நிறுத்திக்கோங்க”- எச்சரித்த சனம் ஷெட்டி…
 
அதனைத்தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா பற்றியும் அவர் மிக மோசமாக விமர்சித்து வருகிறார். இதனால் சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் கடுமையாக திட்டித்தீர்த்து வருகின்றனர்..  இதனையடுத்து வீடியோ வெளியிட்டுள்ள மீரா மிதுன், “இதை தான் உங்களது ரசிகர்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறீர்களா? நீங்கள் உண்மையிலேயே ஒரு நட்சத்திரத்திற்கு உண்டான நிலையில் தான் இருக்கிறீர்களா விஜய் மற்றும் சூர்யா. இருவரும் cyberbullies கொண்டு ஒரு பெண்ணை மிரட்டுகிறீர்கள்.
விஜய் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கும் மீரா மிதுன்.. “இதோட நிறுத்திக்கோங்க”- எச்சரித்த சனம் ஷெட்டி…
இனி என்னை சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் திட்டினாள், விஜய் மற்றும் சூர்யா மனைவிகளை அசிங்கமாக திட்டுவேன். மேலும், சூர்யா மற்றும் விஜய் இருவருக்கும் புடவை மற்றும் வளையலை அனுப்புகிறேன் என்று மோசமாக பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.


இந்நிலையில் இப்படி விஜய்யை தரக்குறைவாக விமர்சித்து வரும் மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை சனம் ஷெட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், “விஜய் சார் பற்றி பேசி இருக்கீங்க மீரா. அவர் nepotism product என சொல்கிறீர்கள். உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். எஸ்.ஏ.சி சார் மூலமாக அவருக்கு சினிமாவில் நுழையும் வாய்ப்பு சுலபமாக கிடைத்திருக்கலாம், ஆனால் அவர் முதல் வெற்றியை பெறுவதற்கு ஐந்து வருடங்கள் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டி இருந்தது. தன்னுடைய திறமை மற்றும் கடின உழைப்பால் அனைவரது மனதையும் கவர்ந்தவர். இப்போ வரைக்கும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் அவங்களுக்கு இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவரது அர்ப்பணிப்பு மற்றும் படங்களில் அவரது நடிப்பு பர்ப்பாமென்ஸ் தான்.”
விஜய் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கும் மீரா மிதுன்.. “இதோட நிறுத்திக்கோங்க”- எச்சரித்த சனம் ஷெட்டி…

Share this story