எம்.பி பதவி கேட்கும் ‘சந்தானம்’… எந்த கட்சியிலும் இணைய தயார்…

எம்.பி பதவி கேட்கும் ‘சந்தானம்’… எந்த கட்சியிலும் இணைய தயார்…

ராஜ்ய சபா எம்.பி பதவி கொடுத்தால் எந்த கட்சியிலும் இணைய தயாராக இருப்பதாக நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.

எம்.பி பதவி கேட்கும் ‘சந்தானம்’… எந்த கட்சியிலும் இணைய தயார்…

சந்தானத்தின் காமெடியில் உருவாகியுள்ள படம் ‘பாரீஸ் ஜெயராஜ்’. சந்தானத்தின் ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன் கே இயக்கியுள்ள இந்த படத்தில் அனைகா சோடி ஹீரோயினாக நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் 12ம் தேதி காதலர் தினத்தையொட்டி இந்த படம் ரிலீசாக இருக்கிறது.

எம்.பி பதவி கேட்கும் ‘சந்தானம்’… எந்த கட்சியிலும் இணைய தயார்…

இந்நிலையில் இரு தினங்களில் வெளியாக உள்ள இந்த படத்தின் குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பை சென்னையில் நடத்தினர். இதில் படத்தின் கதாநாயகன் சந்தானம் கலந்துகொண்டார். அப்போது அரசியலுக்கு வருவீர்களா என சந்தானத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜ்ய சபா பதவி கொடுத்தால் எந்த கட்சியிலும் இணைய தயாராக இருப்பதாக தனது பாணியில் காமெடியாக தெரிவித்தார். தொடர்ந்து சசிகலா அழைத்தால் செல்வீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, நிச்சயம் யார் சீட்டு கொடுத்தாலும் செல்ல தயார் என்று கூறினார்.

Share this story