சந்தானத்திற்கு திக்குவாய் பிரச்சனையா??

சந்தானத்திற்கு திக்குவாய் பிரச்சனையா??

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சந்தானம். தொடர்ந்து, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் அவர் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். சமீபத்தில், இவர் நடித்த ‘பிஸ்கோத்து’ படம், தீபாவளிக்கு வெளியானது.சந்தானத்திற்கு திக்குவாய் பிரச்சனையா??

அதோடு ‘டிக்கிலோனா’, ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே, சந்தானத்தை வைத்து ‘ஏ1’ படத்தை இயக்கிய ஜான்சனே, பாரிஸ் ஜெயராஜ் படத்தையும் இயக்குகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப்படம் 2021 ஜனவரியில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சந்தானத்திற்கு திக்குவாய் பிரச்சனையா??

இதையடுத்து சந்தானம் சபாபதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது கும்பகோணம் பகுதிகளில் நடந்து வருகிறது. துமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கும் இந்த படத்தில் சந்தானம், திக்குவாய் குறைபாடு உள்ள நபராக நடிக்கிறாராம். இதுவரை தான் ஏற்காத வித்தியாசமான கேரக்டரில் அவர் நடித்துவருவதாக சொல்லப்படுகிறது.

Share this story