திரைப்படமாகும் விளையாட்டு வீராங்கனை வாழ்க்கை வரலாறு.. படப்பூஜையுடன் தொடங்கியது…

திரைப்படமாகும் விளையாட்டு வீராங்கனை  வாழ்க்கை வரலாறு.. படப்பூஜையுடன் தொடங்கியது…

தமிழக விளையாட்டு வீராங்கனை சாந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திரைப்படமாகும் விளையாட்டு வீராங்கனை  வாழ்க்கை வரலாறு.. படப்பூஜையுடன் தொடங்கியது…

சர்வதேச அளவில் தடகளத்தில் இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களை குவித்து சாதனை படைத்தவர் தமிழக விளையாட்டு வீராங்கனை சாந்தி சௌந்தர்ராஜன். தமிழக வீராங்கனையான இவர், மாநில அளவில் 50 பதக்கங்களுக்கு மேல் வென்றுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் தமிழ் பெண்ணாக வெள்ளிப்பதக்கம் பெற்றார். பாலின சர்ச்சையில் சிக்கிய அவர், தகுதி மறுக்கப்பட்டு வென்ற வெள்ளிப் பதக்கம் திரும்பி பெறப்பட்டது. இதனால் தடகள போட்டிகளில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.

திரைப்படமாகும் விளையாட்டு வீராங்கனை  வாழ்க்கை வரலாறு.. படப்பூஜையுடன் தொடங்கியது…

இவரின் இந்த சோகமான வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளது. பிரபல ஒளிபரப்பதிவாளராக உள்ள ஜெயசீலன் தவப்புதல்வி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 888 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ‘ஆஸ்கர் விருது பெற்ற ‘ரசூல் பூக்குட்டி, இந்த படத்தில் ஒலிக்கலவை செய்ய இருக்கிறார். கோபிநாத் டி தேவ் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

திரைப்படமாகும் விளையாட்டு வீராங்கனை  வாழ்க்கை வரலாறு.. படப்பூஜையுடன் தொடங்கியது…

சாந்தி வாழ்க்கையில் மறைக்கப்பட்ட சில உண்மைகளையும் இந்த திரைப்படத்தில் சுவாரஸ்ய திருப்பங்களோடு இடம்பெற உள்ளது. சாந்தி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இதுவரை மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த மூவரில் ஒருவர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் ‘சாந்தி சௌந்தர்ராஜன்’ பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தடகள வீராங்கனை சாந்தி, இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விரைவில் தொடங்க உள்ள இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தியின் சொந்த கிராமத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து பஞ்சாப், கத்தார், ஓமன் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story