காமெடிலாம் போதும்… கதாநாயனாக களமிறங்கத் தயாரான சதீஷ்!

காமெடிலாம் போதும்… கதாநாயனாக களமிறங்கத் தயாரான சதீஷ்!

காமெடி நடிகர் சதீஷ் புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சதீஷ் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளியான ஜெர்ரி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதையடுத்து தமிழில் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். எதிர்நீச்சல் படம் தான் சதீஷுக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.

காமெடியில் உச்சத்தை அடைந்த பிரபல காமெடி நடிகர்கள் அனைவரும் அடுத்ததாக ஹீரோவாக களமிறங்குவது வழக்கம். தற்போது நடிகர் சதீஷும் அந்த வழியைக் கையில் எடுத்திருக்கிறார்.

காமெடிலாம் போதும்… கதாநாயனாக களமிறங்கத் தயாரான சதீஷ்!

ஆம், சதீஷ் புதிய படம் ஒன்றின் மூலம் கதாநாயகனாகக் களமிறங்கப் போகிறாராம். ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு படத்தில் மட்டுமில்லை, இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கப்போகிறாராம் சதீஷ். இந்த இரண்டு படங்களுக்கான கதை மற்றும் இயக்குநர்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படங்கள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Share this story