கானா பாடகராக கலக்கும் சந்தானம்… பாரிஸ் ஜெயராஜ் படத்தின் செகண்ட் லுக்!

கானா பாடகராக கலக்கும் சந்தானம்… பாரிஸ் ஜெயராஜ் படத்தின் செகண்ட் லுக்!

சந்தானம் நடித்து வரும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் கே ஜான்சன் மற்றும் சந்தானம் கூட்டணியில் உருவான ‘A1’ திரைப்படம், போன வருடம் ரிலிஸ் ஆகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே சந்தானம், கே ஜான்சனுடன் மீண்டும் ஒரு படத்தில் கூட்டணி அமைக்க முடிவெடுத்தார்.

Image

இவர்கள் கூட்டணியில் உருவாகிவரும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் கவனம் ஈர்த்தது.

தற்போது பாரிஸ் ஜெயராஜ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் சந்தானம் மைக்கை, கோல்ப் ஸ்டிக் போல கையில் வைத்துக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வருகிறார். காவியத் தலைவன், செம போத ஆகாதே படங்களில் நடித்த அனைகா சோதி என்பவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் சன் மியூசிக் சேனலில் விஜேவாக பணியாற்றிய சஸ்டிகாவும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சந்தானம் வடசென்னையைச் சேர்ந்த கானா பாடகராகவும் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share this story