ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… கார்த்தி படத்தில் சிம்பு பாடியுள்ள பாடல் இன்று வெளியீடு!

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… கார்த்தி படத்தில் சிம்பு பாடியுள்ள பாடல் இன்று வெளியீடு!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் சிம்பு பாடியுள்ள பாடல் இன்று வெளியாக உள்ளது.

சிம்பு கோலிவுட்டின் பன்முகத்திறமை கொண்ட நடிகர் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். நடிப்பு மட்டுமில்லாமல், இசை, நடனம், பாடல் என எல்லாவற்றிலும் புகுந்து கலக்குவார். அவர் நடித்த படங்களில் ஒரு பாடலாவது பாடிவிடுவார். வேறு சில படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார். சிம்பு பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… கார்த்தி படத்தில் சிம்பு பாடியுள்ள பாடல் இன்று வெளியீடு!

தற்போது இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள பட சுல்தான் படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாடலான ‘யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல‘ என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்தப் பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.

சுல்தான் படத்தில் தெலுங்கு நடிகை ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

சுல்தான் வரும் ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Share this story