சாம் விஷால், சிவாங்கி குரலில் வெளியாகும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் இரண்டாம் பாடல்!

சாம் விஷால், சிவாங்கி குரலில் வெளியாகும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் இரண்டாம் பாடல்!

ஷாந்தானு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர் என்பவர் இயக்கத்தில் சாந்தனு முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்துள்ளார். அதுல்யா ரவி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பாக்யராஜ், யோகிபாபு, மனோபாலா, பிக்பாஸ் ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்ததுடன் நடிக்கவும் செய்துள்ளார்.

சாம் விஷால், சிவாங்கி குரலில் வெளியாகும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் இரண்டாம் பாடல்!

இந்தப் படத்திற்கு தருண் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திலிருந்து வெளியான முதல் பாடலான எதோ சொல்ல பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சாம் விஷால், சிவாங்கி குரலில் வெளியாகும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் இரண்டாம் பாடல்!

‘டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு’ என்ற இந்தப் பாடலை தற்போது ட்ரெண்டிங் ஸ்டார்களாக இருக்கும் சாம் விஷால் மற்றும் சிவாங்கி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். எனவே இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

Share this story