“நீங்கள் இனவெறியாளரா!?” ஐஸ்வர்யா ராஜேஷை மங்கலான நிறத்தவர் என்று குறிப்பிட்ட சீனு ராமசாமியை சாடும் நெட்டிசன்கள்!

“நீங்கள் இனவெறியாளரா!?” ஐஸ்வர்யா ராஜேஷை மங்கலான நிறத்தவர் என்று குறிப்பிட்ட சீனு ராமசாமியை சாடும் நெட்டிசன்கள்!

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் க/பெ.ரணசிங்கம் படம் ZEEPLEX தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் படம் குறித்து பேசிய இயக்குனர் சீனு ராமசாமி “க/பெ ரணசிங்கம், ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த மங்கல் நிற கதாநாயகி தனது பாராட்டப்பட்ட நடிப்பில் குறிப்பாக 2 வது பாதியில் முழு திரைப்படத்தையும் தாங்கி நிற்கிறார். மாற்று சினிமா மற்றும் பிரதான சினிமா இரண்டிலும் சிறந்த இந்திய நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்” என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த ட்விட்டர் பயனர் ஒருவர் “நீங்கள் ஏன் அவரை மங்கலான நிறமுடையவர் என்று குறிப்பிட்டர்கள், நீங்கள் இனவெறியாளரா? என்று கேள்வியெழுப்பியதற்கு “அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்” (Practical Cool) என்றவாறு சீனு ராமசாமி பதிலளித்தார்.

அப்போ ஒருவரின் தோல் நிறத்தை வைத்து அவர்களின் வெற்றியை அளப்பது நடைமுறைக்குரியது அப்படித்தானே!. உசேன் போல்ட்டின் வெற்றியை N என்ற வார்த்தையை பயன்படுத்தி நீங்கள் எவ்வாறு குறிப்பிடுவீர்கள் என்று யோசிக்கிறேன்? அதே தவறை மீண்டும் செய்ய முயற்சிக்காதீர்கள் சார் .. என்னைப் போலவே நிறைய பேர் உங்களைப் பின்தொடர்கிறார்கள், நாங்கள் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்குகிறோம். நன்றி.” என்று அவரை கடுமையாக சாட்டியிருந்தார்.

அந்தப் பயனரின் கருத்துக்கு பதிலளித்த சீனு ராமசாமி ” சகோ, நான் இனவெறியாளன் இல்லை. அவள் என் குழந்தை. நான் அவளுடைய போராட்டத்தை பேச முயற்சிக்கிறேன். ஊக்கமளிப்பது மட்டுமே, என்னை குறிவைக்க வேண்டாம்.” என்று தெரிவித்தார்.

மேலும் “நீங்கள் கேட்பது புரிகிறது.கருத்த பெண்களுக்கு வாய்ப்பற்ற ஆணாதிக்க சினிமாவில் அப்படி தன் நடிப்பின் திறமையால் ஒரு பெண் முயன்று முன்னேறி வருவதை பெருமையாக கருதும் என் மனதில் ஊக்கச்சொல்லாக சொன்னேன். மாற்று மற்றும் வெகுஜன சினிமாவில் சாதிக்கும் ஐய்ஸ்வர்யாவிற்கு வாழ்த்தே அது தம்பி” என்றும் தெரிவித்துள்ளார்.

Share this story