Sunday, October 25, 2020

ஜப்பான் நாட்டு திரைப்பட விழாவில் திரையிடத் தேர்தெடுக்கப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம்!

ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் சில்லுக்கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழில் வெளியான 'சில்லுக் கருப்பட்டி' திரைப்படம்...

Movie Stills

ஷாருக்கான் இம்ரான் கானாக நடிக்க முடியுமா? சீனு ராமசாமி கேள்வி!

முத்தையா முரளிதரன் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு ஆதரவளித்த ராதிகா மற்றும் குஷ்புவைச் சாடி பதிவிட்டுள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன், வைரமுத்து, பாடலாசிரியர் தாமரை என ஏராளமானோர் விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலகவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

பின்னர் முத்தையா முரளி தரன் இலங்கையில் பிறந்தது எனது தவறா? உள்ளிட்ட கருத்துக்களுடன் மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டார்.

இந்நிலையில், நடிகை ராதிகா விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். விஜய் சேதுபதி ஒரு நடிகர், நடிகரைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

seenu_ramasamy

“பந்துவீச்சாளரின் கடிதத்தில் பள்ளிப் பருவத்து போர்ச்சூழல்கள் வருத்தமே. ஆனால், முரண்பாடுகள் ரணமாக இருக்கும்போது எழுதி நூலாக தமிழில் வெளிவராத ஒரு பயோகிராபியை எப்படி சந்தேகிக்காமல் இருப்பார்கள்? சுயசரிதையை உள்ளூரில் தமிழில் ஏன் வெளியிடவில்லை?.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மீது மக்களும் தலைவர்களும் கலைஞர்களும் வைத்திருக்கும் பாசம் அவர்களது வேண்டுகோளில் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி.

தன் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்யும் முழு உரிமை நடிகருக்கு உண்டு. ஆனால் சில நேரங்களில் சில இடங்களில் அது சாத்தியப்படாமல் முரண்பாடுகள் உள்ள நாடு இது. இம்ரான்கானாக ஷாருக்கான் நடிக்க முடியுமா? அவ்வளவுதான்.

ஆஸ்பத்திரி, அப்பளம், விமானம், ஐபிஎல் பயிற்சியாளர் பணி கருத்து பரப்புமா?. இதற்கும் நடிப்பு சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்? இது முரண்பாட்டைத் தீர்க்குமா? என் மரியாதைக்குரிய சகோதரி ராதிகா சரத்குமார்…

சகோதரி குஷ்புவுக்கு வணக்கம். முன்னாடி நீங்க மணியம்மையாராக நடிச்சீங்க. இப்ப நடிக்க முடியுமா?. சகோதரி நடிப்பு சுதந்திரம் வேற. சமூகப் பரப்பில் ஒரு நடிகருக்கு உண்டாகும் மாற்றம். இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைவரும் வந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Latest Posts

ஜப்பான் நாட்டு திரைப்பட விழாவில் திரையிடத் தேர்தெடுக்கப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம்!

ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் சில்லுக்கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழில் வெளியான 'சில்லுக் கருப்பட்டி' திரைப்படம்...

“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… பப்ஜி படத்தின் பாடலை வெளியிடும் ஆர்யா!

இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக...

சீட்பெல்ட்ட போட்டுக்கோங்க… நாங்க வர்றோம்… சூர்யாவின் அதிரடி அறிவிப்பு!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் ட்ரைலர் அக்டோபர் 26-ம் தேதி விஜயதசமி அன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளனர். சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில்...

விஜயதசமியில் வெளியாகும் ‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்… ஜீவா- அருள்நிதி கூட்டணியின் அதிரடித் திரைப்படம்!

ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள களத்தில் சந்திப்போம் படத்தின் டீசர் 26-ம் தேதி விஜயதசமி அன்று வெளியாகிறது. இயக்குனர் என் ராஜசேகர்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!