‘செம்பருத்தி’ சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்…

‘செம்பருத்தி’ சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்…

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் நடிக்கவுள்ளார்.

‘செம்பருத்தி’ சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்…

கடந்த 2017ம் ஆண்டு முதல் ஜீ தமிழில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘செம்பருத்தி’. இந்த சீரியலில் ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி என்ற கேரக்டரில் பிரியா ராமன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் ரஜினி நடித்த வள்ளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த வந்த கார்த்திக் சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக நடிகர் அக்னி நடித்து வருகிறார்.

‘செம்பருத்தி’ சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்…

இந்த சீரியலில் இருந்து சில நடிகர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சீரியலின் ரேட்டிங் குறைந்து வருகிறது. இதனால் சீரியலின் விறுவிறுப்பை கூட்ட சீரியலில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது. இதையடுத்து மீண்டும் பார்வையாளர்களின் வரவேற்பு இந்த சீரியலுக்கு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் நடிகை துர்காவும் இந்த சீரியலில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்க பிரபல நடிகர் லிவிங்ஸ்டன், சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ளார். இவர், சன் டிவியில் ‘கண்ணான கண்ணே’ , ‘பூவே பூச்சூடவா’ போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story