‘சர்வர் சுந்தரம்’ படத்தின் விருந்து எப்போது ? ரிலீஸ் குறித்த அப்டேட்…

‘சர்வர் சுந்தரம்’ படத்தின் விருந்து எப்போது ? ரிலீஸ் குறித்த அப்டேட்…

சந்தானம் நடிக்கும் சர்வர் சுந்தரம் படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘சர்வர் சுந்தரம்’ படத்தின் விருந்து எப்போது ? ரிலீஸ் குறித்த அப்டேட்…

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’. பழம்பெரும் காமெடி நடிகர் நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படத்தின் பெயரை இப்படத்திற்கு வைத்துள்ளனர். சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். இவர்களுடன் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன, சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பட் உள்ளிட்ட காமெடி பட்டாளமே நடித்துள்ளனர்.

‘சர்வர் சுந்தரம்’ படத்தின் விருந்து எப்போது ? ரிலீஸ் குறித்த அப்டேட்…

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் கடந்த 2017ம் ஆண்டே ரிலீசுக்கு தயாரானது.

‘சர்வர் சுந்தரம்’ படத்தின் விருந்து எப்போது ? ரிலீஸ் குறித்த அப்டேட்…

கடந்த 2 ஆண்டுகளாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும், பைனான்சியருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் தான் நீண்ட காலமாக ரிலீசாகாமல் இருந்தது.

‘சர்வர் சுந்தரம்’ படத்தின் விருந்து எப்போது ? ரிலீஸ் குறித்த அப்டேட்…

இந்நிலையில் பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக இருப்பதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி மாதம் இந்த படம் வெளியிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக வெளிவராமல் இருக்கும் இப்படம் இப்போதாவது வெளியாகுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Share this story