இயக்குனர் ஷங்கருடன் இணையும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ?

இயக்குனர் ஷங்கருடன் இணையும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ?

ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கருடன் இணையும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ?

கமல் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். பிரம்மாண்ட படமாக உருவாகி வந்த இப்படத்தின் ஷூட்டிங்கின் 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்ட ஷூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கமல் தீவிர அரசியல் ஈடுபட்டு வருகிறார். இதனால் இப்படத்தை தொடங்க முடியாத நிலை உள்ளது.

இயக்குனர் ஷங்கருடன் இணையும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ?

இப்போதைக்கு இந்த படத்தை தொடங்க முடியாததால், ஷங்கர் அடுத்த படத்தின் பணிகளை கடந்த மாதம் தொடங்கி முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து தமிழில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஷங்கர், தற்போது தெலுங்கு பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார். தனது புதிய படத்தை பிரபல நடிகர் ராம் சரணை வைத்து இயக்கவுள்ளார். அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் ஷங்கருடன் இணையும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ?

தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் ராம் சரண் ஒரு பவர்புல் முதலமைச்சராக நடிக்க இருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில் இப்படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஷங்கர் இயக்கும் இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இணையவுள்ளார். ‘ஆச்சார்யா’ படத்திற்கு பிறகு ராம் சரணும், சிரஞ்சிவியும் மீண்டும் இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Share this story