ஒரு வீடியோவில் சுதா மேடமிற்கு நன்றி சொல்லிவிட முடியாது – ‘தங்கம்’ வெற்றி குறித்து சாந்தனு நெகிழ்ச்சி..

ஒரு வீடியோவில் சுதா மேடமிற்கு நன்றி சொல்லிவிட முடியாது – ‘தங்கம்’ வெற்றி குறித்து சாந்தனு நெகிழ்ச்சி..

ஆவணக்கொலைகளை மையப்படுத்தி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘பாவக் கதைகள்’. இதில் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தலா ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளனர்.

ஒரு வீடியோவில் சுதா மேடமிற்கு நன்றி சொல்லிவிட முடியாது – ‘தங்கம்’ வெற்றி குறித்து சாந்தனு நெகிழ்ச்சி..

இந்தப் படம் குறித்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்தக் கதைகளில் சுதா கொங்கரா இயக்கிய ‘தங்கம்’ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் ‘தங்கம்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு குறித்து சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒரு வீடியோவில் சுதா மேடமிற்கு நன்றி சொல்லிவிட முடியாது – ‘தங்கம்’ வெற்றி குறித்து சாந்தனு நெகிழ்ச்சி..

அதில்,” ‘தங்கம்’ படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. ஒரு படத்தின் வெற்றி இப்படித்தான் இருக்குமா, ஏனென்றால் இந்த உணர்ச்சி எனக்குப் புதிதாக உள்ளது. கிட்டத்தட்ட ஒரு 12 வருடப் பசி என்று சொல்லலாம். நல்லதொரு படத்தில், நல்லதொரு இயக்குநர் கையில் இருக்க வேண்டும் என நினைத்தேன்.

ஒரு வீடியோவில் சுதா மேடமிற்கு நன்றி சொல்லிவிட முடியாது – ‘தங்கம்’ வெற்றி குறித்து சாந்தனு நெகிழ்ச்சி..

இந்தத் தருணத்தில் ‘தங்கம்’ படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நடிகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதையை எழுதிய ஷான், எங்கள் அனைவருக்கும் நடிப்புப் பயிற்சி அளித்த கலைராணி மேடம் என அனைவருக்கும் நன்றி. இவர்கள்தான் இந்தக் கதையின் நாயகர்கள் என்று சொல்வேன். இவர்களுடைய ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த வெற்றியை எங்களால் இப்போது கொண்டாடியிருக்க முடியாது.

ஒரு வீடியோவில் சுதா மேடமிற்கு நன்றி சொல்லிவிட முடியாது – ‘தங்கம்’ வெற்றி குறித்து சாந்தனு நெகிழ்ச்சி..

சுதா மேடமிற்கு முக்கியமாக நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் இயக்குநர் என்பதற்காக மட்டுமல்ல. அவருக்கே தெரியாமல் அவர் ஒரு மிகப்பெரிய விஷயம் செய்துள்ளார். நான், காளிதாஸ், பவானி ஆகியோர் மாதிரி வளரும் நடிகர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். நல்ல வாய்ப்பு கிடைத்தால் இவர்களாலும் நிரூபிக்க முடியும் என்று நம்பிக்கையைக் கொடுத்துள்ளார். சுதா மேடத்துக்கான நன்றியை ஒரு வீடியோவில் சொல்லிவிட முடியாது”. இந்தப்படத்தை ஏற்றுக்கொண்டு பெரிய ஆதரவு கொடுத்த உங்களும் (ரசிகர்கள்) பெரிய நன்றி.” என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Share this story