அஜித் பிறந்தநாளுக்கு ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் கிடையாது… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ள போனி கபூர்!

அஜித் பிறந்தநாளுக்கு ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் கிடையாது… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ள போனி கபூர்!

அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகாது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக வலிமை படத்தின் அப்டேட் கேட்டு சோர்ந்து போன அஜித் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். எனவே மே 1-ம் தேதி எப்போது வரும், சமூக வலைத்தளங்களை அதிரச் செய்யலாம் என்று அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அஜித் பிறந்தநாளன்று வலிமை பர்ஸ்ட் லுக் வெளியாகாது என்று படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அஜித் பிறந்தநாளுக்கு ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் கிடையாது… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ள போனி கபூர்!

இதுகுறித்து போனி கபூரின் பேவியூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

“எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் குமார் அவர்களின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில், வினோத் இயக்கத்தில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “வலிமை ” படத்தின் First Look. வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம். அந்த அறிவிப்பு வெளிவரும் போது, கோரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ, அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை . இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவி உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.

அஜித் பிறந்தநாளுக்கு ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் கிடையாது… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ள போனி கபூர்!

இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ ப்ரொஜெக்ட்ஸ், இப்படத்தில் நடித்து உள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்து உள்ள முடிவின் படி “வலிமை” படத்தின் Firstlook வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் பிராத்திப்போம்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story