தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்… இன்று முதல் ஷூட்டிங் துவக்கம்!

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்… இன்று முதல் ஷூட்டிங் துவக்கம்!

நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் இன்று முதல் துவங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து முடித்த தனுஷ் அதையடுத்து தான் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறந்தார்.

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்… இன்று முதல் ஷூட்டிங் துவக்கம்!

அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடிக்கிறார். மார்க் கிரீனியின் 2009 நாவலை தழுவி இப்படம் உருவாக்கவிருக்கிறது. இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கேப்டன் அமெரிக்காவாக அறியப்படும் கிறிஸ் எவன்ஸ், மற்றும் அனா டி அர்மாஸ் ஆகியோருடன் ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்… இன்று முதல் ஷூட்டிங் துவக்கம்!

இன்று முதல் கிரே மேன் படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஷூட்டிங் தொடங்குகிறதாம். தனுஷ் சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்று நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார். படத்தின் முதற்கட்ட வேலைகள் முடிந்து தற்போது படக்குழு படப்பிடிப்பிற்குச் சென்றுள்ளனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Share this story