அப்பா பற்றி சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன்!

அப்பா பற்றி சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவின் பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். வாரிசு நடிகையாக இருந்தாலும் தனது திறமை மூலமே மக்கள் மனதில் இடம் பிடித்தவர். நடிப்பு, இசை, பாடல் என பன்முகத்திறமை கொண்டவர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன் தனது அப்பா கமல்ஹாசன் பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்பா பற்றி சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன்!

“’உங்கள் மகள்களான ஸ்ருதி மற்றும் அக்ஷராவை இந்தத் தொழிலுக்கு (திரைப்படத் தொழில்) அனுப்புவது பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா?’ என என் அப்பா கமல்ஹாசனிடம் கேட்டார். ‘உங்கள் மகளை ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கும் போது யார் என்று தெரியாத ஒரு வீட்டிற்கு தானே அனுப்புகிறீர்கள், நானோ எனது மகள்களை நான் சிறுவயதிலிருந்து வளர்ந்த என் வீட்டிற்கு தான் அனுப்பியுள்ளேன். நான் வலிமையாக இருக்கக் கற்றுக்கொடுத்துள்ளேன். அவளுடைய இந்த வாழ்க்கை பயணத்தை மதிக்கவும் கற்றுக்கொடுத்துளேன் ” என்று கூறினார்.

அப்பா பற்றி சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன்!

“உங்கள் கார்ப்பரேட் அலுவலகத்தில் முதலாளிக்கு இணங்கி செல்லாத பெண்ணாக இருந்தால் நீங்கள் அதற்கான விலையை செலுத்த வேண்டி வரும். நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா, அது வேறு கேள்வி. எந்தவொரு தொழிற்துறையையும் தரம் தாழ்த்தி [பேசுவது நியாயமானது என்று நான் நினைக்கவில்லை.” என்று ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன் விஜய் சேதுபதி உடன் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ படத்தில் பவன் கல்யாண் உடன் நடித்து வருகிறார்.

Share this story