ஒரு நாள்கூட போனதில்ல… ஆனா இப்ப போகனுன்னு தோணுது… ஸ்ருதி எதப் பத்தி சொல்றாங்க!

ஒரு நாள்கூட போனதில்ல… ஆனா இப்ப போகனுன்னு தோணுது… ஸ்ருதி எதப் பத்தி சொல்றாங்க!

நடிகை சுருதிஹாசன் தென்னிந்தியாவில் லீடிங் நடிகையாக நிலைத்து வருகிறார். எப்போதும் பிசியாக இருந்து வரும் ஸ்ருதி தற்போது ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ளதால் சோசியல் மீடியா பக்கம் அடிக்கடி தலை காட்டிவருகிறார். 
இதுவரை ஒருமுறை கூட சலூனுக்கு செல்லாத சுருதிஹாசன் தற்போது ஊரடங்கால் செல்ல விரும்புவதாக தெரிகிறது.
ஒரு நாள்கூட போனதில்ல… ஆனா இப்ப போகனுன்னு தோணுது… ஸ்ருதி எதப் பத்தி சொல்றாங்க!
இதுகுறித்து பதவிட்ட ஸ்ருதி  “இது லேடீஸ் பியூட்டி பார்லருக்கு போவதற்கான நேரம் ஆக கூட இருக்கலாம்? வேடிக்கையான விஷயம் தான்… சலூனுக்கு செல்வதை நான் எப்போதும் விரும்பியதில்லை. ஆனால், இப்போது என்னால் போக முடியாது என்பதால் தான் நிச்சயமாக, நான் இப்போது போக விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்


ஸ்ருதி ஹாசன் தற்போது யாரா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நேரடியாக ZEE5 தளத்தில் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் க்ராக் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Share this story