பொங்கல் தினத்தில் தாண்டவம் ஆட வரும் ‘ஈஸ்வரன்’… சிம்பு வேற லெவலில் மாஸ் காட்டும் போஸ்டர்!

பொங்கல் தினத்தில் தாண்டவம் ஆட வரும் ‘ஈஸ்வரன்’… சிம்பு வேற லெவலில் மாஸ் காட்டும் போஸ்டர்!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுசீந்திரன்- சிம்பு கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகி வருவது இருப்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். இந்தப் படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. எஸ் தமன் இசையமைக்கிறார். இயக்குனர் பாரதிராஜாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கிராமத்துக் கதை பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

Image

தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் வெளியாகி உள்ளது. படத்திற்கு ஈஸ்வரன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மோஷன் போஸ்டரில் கையில் ஒரு பாம்புடன் மாஸான லுக்கில் மிரட்டுகிறார் சிம்பு. நீண்ட நாட்கள் காத்திருந்த சிம்பு ரசிகர்களுக்கு இப்படம் பெரிய ட்ரீட் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பொங்கல் தினத்தில் தாண்டவம் ஆட வரும் ‘ஈஸ்வரன்’… சிம்பு வேற லெவலில் மாஸ் காட்டும் போஸ்டர்!

ஈஸ்வரன் என்ற தலைப்பிற்குக் கீழ் வாய்மையே வாகை சூடும் என்ற வாசகமும் இடமெப்ற்றுள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக நாங்கள் ஏற்கனவே தெரிவித்தது தற்போது உறுதியாகியுள்ளது. ஈஸ்வரன் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.

மோஷன் போஸ்டரில் சிம்பு கையில் ஒரு கிரிக்கெட் மட்டையுடன் காணப்படுகிறார். எனவே இப்படம் கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. வெண்ணிலா கபடி குழு, ஜீவா, கென்னடி கிளப், செம்பியன் உள்ளிட்ட பெரும்பாலான விளையாட்டுக் கதைக்களம் கொண்ட படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளதால் இந்தப் படமும் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story