சிம்புவின் சர்ப்ரைஸ் என்ட்ரியால் உற்சாகமான ஜெய்!

சிம்புவின் சர்ப்ரைஸ் என்ட்ரியால் உற்சாகமான ஜெய்!

நடிகை ஜெய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு கலந்துகொண்டு அவரை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

நடிகர் ஜெய் நேற்று தனது 37 வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு கலந்துகொண்டு ஜெயை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இருவரும் கேக் வெட்டி பரிமாறிக் கொண்டுள்ள புகைப்படங்களை ஜெய் பகிர்ந்துள்ளார்.

சிம்புவின் சர்ப்ரைஸ் என்ட்ரியால் உற்சாகமான ஜெய்!

நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் சிம்பு மாலை 4.30 மணியளவில் வாக்களித்தார். அதன்பின்னர் ஜெய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

சிம்புவின் சர்ப்ரைஸ் என்ட்ரியால் உற்சாகமான ஜெய்!

அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜெய் “இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இது மகிழ்ச்சியான ஆச்சரியம். எனக்காக நேரம் ஒதுக்கி நீங்கள் வந்தது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. நீங்கள் வந்து எனது பிறந்தநாளை கூடுதல் சிறப்பாக மாற்றியதற்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

ஜெய் தற்போது ‘எண்ணித் துணிக’, ‘குற்றமே குற்றம்’, ‘சிவ சிவா’ என சில படங்களில் நடித்து வருகிறார். சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார்.

Share this story