'சிம்புவிற்கு குவியும் பட வாய்ப்புகள்'…எங்கப்பா இருந்தீங்க இவளோ நாளா..?

'சிம்புவிற்கு குவியும் பட வாய்ப்புகள்'…எங்கப்பா இருந்தீங்க இவளோ நாளா..?

“நான் ஸ்டார்ட் பண்ண மாட்டேன ..,பண்ணிட்டா நிறுத்த மாட்டேன்” என்னும் வசனத்திற்கு ஏற்றவர் நடிகர் சிம்பு தான். எப்போது சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கினாரோ அப்போதே அவருக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. மாநாடு படத்திற்கு சிம்பு ஒழுங்காக படப்பிடிப்புக்கு வருகிறார் என செய்திகள் பரவியது.
'சிம்புவிற்கு குவியும் பட வாய்ப்புகள்'…எங்கப்பா இருந்தீங்க இவளோ நாளா..?
அவ்வளவுதான், இவ்வளவு நாட்கள் அத்தனை தயாரிப்பாளர்கள் எங்கிருந்தார்கள் என்றே தெரியவில்லை. பலாப்பழத்தில் ஈ மொய்ப்பதைப் போல சிம்பு மீது மொய்த்து விட்டனர்.அதன் விளைவு, தொடர்ச்சியாக பழையபடி பல படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. அந்த வகையில் மாநாடு, அதனைத் தொடர்ந்து அதே கூட்டணியில் இன்னொரு படம், மிஸ்கின் படம் என வரிசை கட்டி நிற்கின்றது.
'சிம்புவிற்கு குவியும் பட வாய்ப்புகள்'…எங்கப்பா இருந்தீங்க இவளோ நாளா..?
இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளது பார்த்திபன் மற்றும் சிம்பு ஜோடி. ஏற்கனவே இந்த ஜோடியை கேரளாவில் வெற்றி பெற்ற அய்யப்பனும் கோசியும் படத்தில் பயன்படுத்தலாம் என பேசி வருகின்றனர்.இந்நிலையில் பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாம். அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
'சிம்புவிற்கு குவியும் பட வாய்ப்புகள்'…எங்கப்பா இருந்தீங்க இவளோ நாளா..?
சிம்பு காட்டில நல்ல மழைதான் போங்க எண்ணிக்கை எப்போவுமே ஒரு நல்ல முடிவை தராது குறைவான படங்கள் பன்னால்கூட வித்யாசமான படங்களையே தற்பொழுது ரசிகர்கள் விரும்பி பார்க்கின்ரனர்.தரமான படங்களை தேர்வு செய்தால் நிச்சயம் வேற லெவலில் சிம்பு வந்து நிற்பார் என்பதே ரசிகர்களின் ஆவல் விருப்பமாகவும் உள்ளது

Share this story