ஆக்ஷனில் பட்டையை கிளப்பும் ‘சிம்பு’ … மாநாடு டீசரை வெளியிட்டார் ‘ஏ.ஆர்.ரகுமான்’

ஆக்ஷனில் பட்டையை கிளப்பும் ‘சிம்பு’ … மாநாடு டீசரை வெளியிட்டார் ‘ஏ.ஆர்.ரகுமான்’

சிம்பு நடித்து வெளிவரவிருக்கும் ‘மாநாடு’ படத்தின் தமிழ் டீசரை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டார். அதேபோன்று மற்ற மொழிகளிலும் வெளியானது.

ஆக்ஷனில் பட்டையை கிளப்பும் ‘சிம்பு’ … மாநாடு டீசரை வெளியிட்டார் ‘ஏ.ஆர்.ரகுமான்’

வெங்கட் பிரபு-சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ளது மாநாடு திரைப்படம். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஆக்ஷனில் பட்டையை கிளப்பும் ‘சிம்பு’ … மாநாடு டீசரை வெளியிட்டார் ‘ஏ.ஆர்.ரகுமான்’

அரசியலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங், சென்னை, பாண்டிச்சேரி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

ஆக்ஷனில் பட்டையை கிளப்பும் ‘சிம்பு’ … மாநாடு டீசரை வெளியிட்டார் ‘ஏ.ஆர்.ரகுமான்’

இந்நிலையில் மாநாடு படத்தின் டீசர் தனது பிறந்தநாளில் வெளியாகும் என சிம்பு ஏற்கனவே அறிவித்திருந்தார். சிம்பு பிறந்தநாளான இன்று மாநாடு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.இந்த டீசரை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

5 மொழிகளில் உருவாகும் மாநாடு படத்தின் டீசரை தமிழ்,இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியில் பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ளார். இதேபோன்று தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவும், கன்னடத்தில் நடிகர் சுதீப்பும், மலையாளத்தில் பிருத்விராஜூம் வெளியிட்டுள்ளனர்.

ஆக்ஷனில் பட்டையை கிளப்பும் ‘சிம்பு’ … மாநாடு டீசரை வெளியிட்டார் ‘ஏ.ஆர்.ரகுமான்’
.

டீசரில் சிம்புவின் அதிரடி சண்டைக்காட்சிகள் தூள் பறக்கிறது. சிம்பு பேசும் வசனங்கள் தெறிக்கிறது. மொத்தத்தில் மாநாடு டீசர் வேற‌லெவல்லதான் இருக்கிறது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story