‘சூரரைப்போற்று’ இயக்குனருடன் இணையும் ‘சிம்பு’

‘சூரரைப்போற்று’ இயக்குனருடன் இணையும் ‘சிம்பு’

சிம்புவின் புதிய படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘சூரரைப்போற்று’ இயக்குனருடன் இணையும் ‘சிம்பு’

சிம்பு நடித்து பொங்கலுக்கு வெளிவந்த ஈஸ்வரன் படம் வெற்றிக்கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு நடித்த இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படத்தில் 30 கிலோ வரை எடையை குறைத்து மெல்லிய தோற்றத்தில் நடித்திருந்தார் சிம்பு. இதனை திரையில் பார்த்த ரசிகர்களும் சிம்புவை கொண்டாடி வருகின்றனர்.

‘சூரரைப்போற்று’ இயக்குனருடன் இணையும் ‘சிம்பு’

இதையடுத்து சிம்பு அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். முதலில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதன் மோஷன் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து பத்து தல படத்தில் நடிக்கிறார் சிம்பு. இப்படி அடுத்தடுத்த படங்களில் சிம்பு நடித்து வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

‘சூரரைப்போற்று’ இயக்குனருடன் இணையும் ‘சிம்பு’

இந்நிலையில் பிரபல இயக்குனர் சுதா கொங்கரா, சிம்புவை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story