குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சிம்பு!

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சிம்பு!

நடிகர் சிம்பு குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி வீட்டிற்கு தீடிர் விசிட் அடித்துள்ளார்.

நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2-ல் பல போட்டிகளுக்குப் பின்னர் கனி டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்பட்டு 5 லட்சம் பரிசையும் தட்டிச் சென்றார். தமிழக மக்களிடேயே மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கனி தான் மக்களுக்கு மிகவும் பிடித்த சமையல்காரர் என்றே சொல்லலாம். தற்போது ‘காரக்குழம்பு கனி’ என்று தான் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சிம்பு!

குக் வித் கோமாளி கிராண்ட் பினாலே சுற்றில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் அனைவர்க்கும் பல ஆச்சர்யங்களை வழங்கினார் விஜய் டிவி குழுவினர். ஏஆர் ரஹ்மான் வீடியோ கால், சந்தோஷ் நாராயணன் விசிட், அறிவு, தீ விசிட் என பல சர்ப்ரைஸ் கொடுத்தனர். பெரிய ஆச்சர்யமாக சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடைசி வரை போட்டியாளர்களுடன் ஐக்கியமாகிவிட்டார். நிகழ்ச்சியில் மிகவும் உற்சாகமாக காணப்பட்டதுடன் போட்டியாளர்களையும் குஷிப்படுத்தினார்.

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சிம்பு!

தற்போது சிம்பு கனி வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார். மேலும் மகத், ரக்ஷன் ஆகியோரும் சென்றுள்ளனர். புகைப்படத்தில் கனி, அவரது கணவர் திரு, சிம்பு, மகத், ரக்ஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share this story