அம்மாவின் அன்பில் நெகழும் சிம்பு… வைரலாகும் வீடியோ

அம்மாவின் அன்பில் நெகழும் சிம்பு… வைரலாகும் வீடியோ

நடிகர் சிம்புவின் அம்மா அவருக்கு சாப்பாடு ஊட்டும் நெகிழ்ச்சியான வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அம்மாவின் அன்பில் நெகழும் சிம்பு... வைரலாகும் வீடியோ
அம்மாவின் அன்பில் நெகழும் சிம்பு… வைரலாகும் வீடியோ

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடித்து திரையரங்கு மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய படத்தின் ஷூட்டிங்கை 28 நாட்களில் முடித்து படக்குழுவை அதிர வைத்தார் சிம்பு.

அம்மாவின் அன்பில் நெகழும் சிம்பு… வைரலாகும் வீடியோ

இதைத்தொடர்ந்து சிம்பு மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் ரிலீசாக உள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிம்பு தொடர்பாக காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிம்பு சொன்ன நேரத்திற்கு முன்பாக 1 நேரம் முன்னரே வந்துவிடுகிறாராம். இதனால் படக்குழு சிம்புவை ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர். சிம்பு ஆளே மாறிவிட்டார். இப்பார்க்கும் சிம்பு வேற லெவல்ல இருக்கிறாருன்னு புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இந்நிலையில் தன் குடும்பத்தில் நடக்கும் அழகிய தருணங்களை புகைப்படங்களாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அதுபோன்று ஒரு அழகிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிம்புவின் தாய், அவருக்கு சாப்பாடு ஊட்டுகிறார். அப்போது சிம்புவின் தங்கை மகன் ஜேசன், ஒரு கேள்வி எழுப்புகிறார். அவருக்கு ஏன் சாப்பாடு ஊட்டிகிறீர்கள் என பாட்டியை பார்த்து கேட்கிறார் ஜேசன், அதற்கு உன் அம்மா உனக்கு ஊட்டிவிடுவதைப் போல, என் அம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க என குழந்தைக்கு புரிய வைக்கிறார் சிம்பு. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இருந்தாலும் தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Share this story