விக்ரம் படத்தில் கதாநாயகியான சிம்ரன்!

விக்ரம் படத்தில் கதாநாயகியான சிம்ரன்!

விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் விக்ரம் நடித்து வந்தார்.

கோப்ரா படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்த பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சீயான் 60 படத்தில் இணைகிறார் விக்ரம். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். அனிரூத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

விக்ரம் படத்தில் கதாநாயகியான சிம்ரன்!

இந்தப் படத்தில் விக்ரம் உடன் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். அப்பா, மகன் இணைந்து நடிக்கும் படம் என்பதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு இரண்டு கதாநாயகிகள் தேவைப்படுகிறார்கள். ஏற்கனவே வாணி போஜன் ஒரு கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அடுத்த கதாநாயகியாக நடிகை சிம்ரன் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் பிதாமகன் படத்தில் ஒரே பாடலுக்கு மட்டும் சிம்ரன் நடனமாடியிருப்பார். கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் சிம்ரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story