“கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்” – நெகிழ்ச்சிப் பதிவிட்ட சிம்ரன்!

“கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்” – நெகிழ்ச்சிப் பதிவிட்ட சிம்ரன்!

90-களின் லேடி சூப்பர்ஸ்டார் சிம்ரன் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்போது வெளிவந்த அனைத்து படங்களிலும் சிம்ரன்தான் கதாநாயகி. 90- களில் இளைஞர்களின் கனவுக் கன்னி யார் என்று கேட்டால் தான் பெரும்பாலும் சிம்ரன் தான் என்று பதில் வரும்.
சிம்ரன் தமிழ் சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1997ம் ஆண்டு விஐபி, ஒன்ஸ்மோர் ஆகிய படங்களில் மூலம் அறிமுகமானார். இரு படங்களும் ஒரே நாளில் திரைக்கு வந்தன. அதன் பின்பு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக உருவெடுத்தார். அவள் வருவாளா,நட்புக்காக, ஜோடி, துள்ளாதமனமும்துள்ளும், வாலி, பிரியமானவளே, கன்னத்தில் முத்தமிட்டால், வாரணம் ஆயிரம் என தொடர்ந்து வெற்றிப் படங்கள்தான். சிம்ரன் 2003 ஆம் ஆண்டில் தீபக் பகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
Simran on Twitter: "Congrats #Masters team and my dear friend ...
விஐபி ஒன்ஸ்மோர் படங்கள் வெளியாகி இன்றோடு 23 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதுகுறித்து சிம்ரன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் . 23 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிப்பில் வல்லவர் சிவாஜிகணேசனுடன் பணியாற்றிய தருணங்கள் இன்னும் மகிழ்ச்சி தந்துகொண்டு தான் இருக்கின்றன. சிவாஜி சாருடன் நடித்தது எனது கனவு நனவாகிய தருணம். அவரின் ஆசிர்வாதம் மற்றும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டதே நான் இப்போது இருக்கும் நிலைக்குக் கரணம் என்று பதிவிட்டுள்ளார்.


மேலும், “நண்பர்கள் விஜய், பிரபுதேவா, ரம்பா, அப்பாஸ் ஆகியோருடன் எனது பயணத்தை ஆரம்பித்தது எனது அதிர்ஷ்டம். கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்” என்று நெகிழ்ச்சிப் பதிவிட்டுள்ளார்.

Share this story