டாக்டர் பட அப்டேட்: ’செல்லம்மா’ பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

டாக்டர் பட அப்டேட்: ’செல்லம்மா’ பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

ஹீரோ படத்தைத் தொடர்ந்து  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும்  டாக்டர். கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும், இந்தப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.  மேலும் இந்தப்படத்தில் வினய், கலையரசன் மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டாக்டர் பட அப்டேட்: ’செல்லம்மா’ பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு…
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிரூத் இசையமைக்கிறார். இது மெடிக்கல் திரில்லர் படம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.. ஆனால் டாக்டர் ஒரு வேடிக்கை நிரம்பிய படம் என்று இயக்குநர் நெல்சன் தெரிவித்திருந்தார். இந்தப்படத்தை கிறிஸ்துமஸுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டாக்டர் பட அப்டேட்: ’செல்லம்மா’ பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு…
 
சமீபத்தில் இந்த படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ’செல்லம்மா’ பாடலின்  ஃபர்ஸ்ட்  சிங்கிள் வரும் 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும், இந்த பாடல் சமீபத்தில் தடை செய்யப்பட்ட டிக்டாக் குறித்த பாடல் என்பது குறிப்பிடதக்கது. இந்த அறிவிப்போடு அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோர்கள் டிஸ்கஷன் செய்யும் 2 நிமிட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


 

Share this story