Sunday, October 25, 2020

ஜப்பான் நாட்டு திரைப்பட விழாவில் திரையிடத் தேர்தெடுக்கப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம்!

ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் சில்லுக்கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழில் வெளியான 'சில்லுக் கருப்பட்டி' திரைப்படம்...

Movie Stills

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.!

சுமதி என் சுந்தரி என்ற படத்திற்காக “பொட்டு வைத்த முகமோ” என்ற பாடலை பாட வைக்க மெல்லிசை மன்னர், எஸ்பிபியை தேர்ந்து எடுத்தார். விஷயம் கேள்விப்பட்ட எஸ்பிபி மகிழ்ச்சி அடைவதை விட மிகவும் டென்ஷன்தான் ஆகிவிட்டார். காரணம் படத்தின் ஹீரோ சிவாஜி.
அந்தக் காலத்தில் சிவாஜி என்பதும் டிஎம்எஸ் என்பதும் வேறு வேறு அல்ல. டிஎம்எஸ்ஸில் ரசிகர்கள் சிவாஜியை பார்த்தார்கள். சிவாஜியிடம் ரசிகர்கள் டிஎம்எஸ்ஸை ரசித்தார்கள்.

அப்படிப்பட்ட சிவாஜிக்கு தன்னுடைய மென்மையான குரலில் பாடல் பாடினால் சிவாஜியை திருப்தி படுத்த முடியுமா? இல்லை சிவாஜி ரசிகர்களிடம் தான் தான் பெயரெடுக்க முடியுமா? பெயர் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் திட்டுக்கும் ஆளாக நேரிடுமே என்ற பயம் எஸ்பிபிக்கு.

அந்த நாளும் வந்தது. எஸ்பிபி சிவாஜிக்கு தன் முதல் பாடல் என்ற அந்த பயத்தோடவே ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சென்றார். ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்ற பாலுவுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அங்கு நடிகர் திலகம் ஒரு நாற்காலியில் ஹாயாக அமர்ந்திருந்தார். எஸ்பிபிக்கு அவரை பார்த்தவுடன் அதிர்ச்சி. எக்ஸாம் ஹாலுக்குள் ஹெட் மாஸ்டரே வந்தது போல் ஒரு பயம்.

எஸ்பிபியை அருகே அழைத்த சிவாஜி, சிறிது நேரம் கேஷுவலாக பேசிவிட்டு சரி போய் பாடு என அனுப்பி விட்டார். “அப்பா எஸ்கேப்” என்ற மனநிலையுடன் எஸ்பிபி ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களில் ஓடிச்சென்று புகுந்துகொண்டார்.

உண்மையில் சிவாஜி அவரின் எந்த பாடல் ரெக்கார்ட்டிங்கிற்கும் பொதுவாக வருவதில்லை. ரிக்கார்டிங் தியேட்டரில் உள்ளவர்களுக்கே இது பெரிய ஆச்சரியம். யார் பாடல் பதிவுக்கும் வராத சிவாஜி, இந்தச் சின்ன பையனின் ரெக்கார்டிங்கிற்கு ஏன் வந்தார் என்பது அனைவருக்கும் ஆச்சரியம்.

எஸ்பிபி டென்ஷன் எல்லாம் கொஞ்சம் விட்டுவிட்டு பாடல் பாட ஆரம்பித்தார். திடீரென ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் ஒரு தலை எட்டிப்பார்க்கிறது எஸ்பிபி திரும்பி பார்க்கிறார். அது சிவாஜியின் தலை கை கால்கள் வெட வெடக்க ஆரம்பிக்கின்றது. பாடல்கள் பாட முடியாமல் நாக்கு உளறர ஆரம்பிக்கின்றது. ரெக்கார்ட்டிங் நிறுத்தப்படுகின்றது.

சிவாஜி ரெக்கார்டிங் ரூமிற்குள் சென்றார். எஸ்பிபியிடம் சொன்னார். சில பேர் உன்னை குழப்பி இருப்பார்கள். சிவாஜிக்கு டிஎம்ஸ் குரல் தான் பொருத்தமாக இருக்கும் என்று. அதனால் டிஎம்எஸ் ஸ்டைலில் எனக்காக பாட முயற்சிக்காதே. உன் இயல்பான குரல், ஸ்டைல் எப்படியிருக்குமோ அதே குரலிலயே பாடு. உன்னுடைய குரலுக்கு நான் எப்படி நடிக்கிறேன் என்று நீ படத்தில் வந்து பாரு என்று சொன்ன சிவாஜி, எம்எஸ்வியிடமும் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

சுமதி என் சுந்தரியில் வரும் பொட்டு வைத்த முகமோ பாடலை இன்றும் பாருங்கள், வழக்கமான எல்லா படத்தைவிட இளமை துள்ளலுடன் மிக ஸ்டைலாக சிவாஜி நடித்து இருப்பார்.

அதற்கு சிவாஜி பயன்படுத்திய டெக்னிக் என்ன தெரியுமா. அந்தக் காலகட்டத்தில் வழக்கமாக எஸ்பிபி முத்துராமன், சிவகுமார் போன்றவர்கள் தான் அதிகமாக பாடிக்கொண்டிருந்தனர். சிவாஜி என்ன செய்தார் தெரியுமா முத்துராமனின் மேனரிசங்களையும் நடையும் சற்று இமிடேட் பண்ணி அந்தப் படத்தில் சிவாஜி பண்ணியிருப்பார்.

அதுவே ஒரு புதிய ஸ்டைலாக தோன்றும். இந்த காலத்தில், படத்துக்குப்படம் தன் குரலை கூட மாற்ற முடியாமல், எல்லா படத்திலும் எல்லா கேரக்டர்களுக்கும் ஒரே குரலில் பேசிக் கொண்டிருக்கும் இந்தக் கால நடிகர்களுக்கு மத்தியில், சிவாஜிகணேசன் அந்த காலத்திலேயே குரலுக்கு ஏற்றவாரெலாம் நடித்திருந்தார்.

அதுதான் அவர் நடிகர் திலகம்.

-ஜேம்ஸ் டேவிட்

Latest Posts

ஜப்பான் நாட்டு திரைப்பட விழாவில் திரையிடத் தேர்தெடுக்கப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம்!

ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் சில்லுக்கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழில் வெளியான 'சில்லுக் கருப்பட்டி' திரைப்படம்...

“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… பப்ஜி படத்தின் பாடலை வெளியிடும் ஆர்யா!

இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக...

சீட்பெல்ட்ட போட்டுக்கோங்க… நாங்க வர்றோம்… சூர்யாவின் அதிரடி அறிவிப்பு!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் ட்ரைலர் அக்டோபர் 26-ம் தேதி விஜயதசமி அன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளனர். சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில்...

விஜயதசமியில் வெளியாகும் ‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்… ஜீவா- அருள்நிதி கூட்டணியின் அதிரடித் திரைப்படம்!

ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள களத்தில் சந்திப்போம் படத்தின் டீசர் 26-ம் தேதி விஜயதசமி அன்று வெளியாகிறது. இயக்குனர் என் ராஜசேகர்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!