சிம்பு வழியைப் பின்பற்றும் சிவகார்த்திகேயன்!?

சிம்பு வழியைப் பின்பற்றும் சிவகார்த்திகேயன்!?

நடிகர் சிவகார்த்திகேயன் புதிதாக நடிக்கவிருக்கும் டான் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்கவிருக்கிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

தற்போது சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி என்பவர் இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடிக்கவுள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். லைகாவுடன் இணைந்து முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

சிம்பு வழியைப் பின்பற்றும் சிவகார்த்திகேயன்!?

டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் துவங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ‘ஈஸ்வரன்’ படத்தை சிம்பு 30 நாளில் முடித்ததைப் போல சிவகார்த்திகேயனும் 30 நாட்களில் படத்தின் 70 சதவீதக் காட்சிகளை நிறைவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் கோயம்புத்தூரில் படமாக்கப்பட இருக்கிறதாம்.

சிம்பு வழியைப் பின்பற்றும் சிவகார்த்திகேயன்!?

டான் படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் சமுத்திரகனி, காமெடி நடிகர் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Share this story